Jan 19, 2026
Thisaigal NewsYouTube
கைப்பேசியைத் திருப்பி தந்து விட்டார், நடவடிக்கையில்லை
தற்போதைய செய்திகள்

கைப்பேசியைத் திருப்பி தந்து விட்டார், நடவடிக்கையில்லை

Share:

கைப்பேசி விற்பனைக் கடையிலிருந்து iPhone 13 Pro Max வகையைச் சேர்ந்த கைப்பேசியைத் திருடிச் சென்ற நபர், அந்த விலை உயர்ந்த கைப்பேசியைத் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அந்தக் கைப்பேசியைத் திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கோலாலம்பூர் வங்சா மாஜு போலீஸ் தலைவர் அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.

வங்சா மாஜுவில் உள்ள அந்த கைப்பேசி கடையில் கைப்பேசி வாங்குவதைப் போல பாவனை செய்த சந்தேகப் பேர்வழி, தமது விபரங்களைப் பாரத்தில் பூர்த்தி செய்வதைப் போல நடித்து கைப்பேசியை மின்னல் வேகத்தில் திருடிக்கொண்டு ஓடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடைக்காரர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் களவாடிச் செல்லப்பட்ட அந்தக் கைப்பேசியைச் சம்பந்தப்பட்டவர் திருப்பித் தந்து விட்டார் என்று கூறி, கடைக்காரர் தமது போலீஸ் புகாரை மீட்டுக்கொண்டதால் கைப்பேசியைத் திருடிய நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற போலீஸ் அதிகாரி அஷாரி அபு சமாஹ் தெரிவித்துள்ளார்.

Related News

கைப்பேசியைத் திருப்பி தந்து விட்டார், நடவடிக்கையில்லை | Thisaigal News