Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முகநூலில் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பிய சம்பவம் குறித்து 10 நபர்களிடன் போலீசார் விசாரணை.
தற்போதைய செய்திகள்

முகநூலில் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பிய சம்பவம் குறித்து 10 நபர்களிடன் போலீசார் விசாரணை.

Share:


'ஹரப்பான் மலேசியா' மற்றும் 'சஹபாட் அன்வார் இப்ராஹிம்' என்ற முகநூல் பொய் கணக்குகளின் வழி பொது சேவை துறையில் பணியாற்றுபவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வந்த இரு முகநூல் கணக்கு உரிமையாளர்களைப் போலீசார் தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோ செரி முகமாட் ஷுஹைலி முகமட் சாயின் தெரிவித்தார்.

முகநூல் பக்கங்களில் போலியான கணக்குகள் வழி பொது சேவை துறையில் பணியார்றுவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவிட்டதுடன் அவர்கள் பி.பி.தி.டி என்ற அரசாங்க தலைமைத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

மேலும், மலேசிய தலைமை செயலாளர் தான் ஶ்ரீ முகமட் ஷுகி அலி மற்றும் கே.பி.பி.ஏ எனப்படும் அரசாங்க ஊழியர் இயக்குனர் மீது தனிப்பட்டத் தாக்குதல் முகநூல் பொய்க்கணக்கு வழி நடத்தியுள்ளதால் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்து வருகின்றது.

Related News