கையெறி குண்டு பயிற்சியின் போது நேர்ந்த விபத்தில் காயமுற்ற அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சியாளர் ஒருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
நெகிரி செம்பிலான், கிம்மாஸ், சைட் சிராஜூடின் குறிசுடும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் 12.10 மணியளவில் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் பயிற்சி மாணவரான 22 வயது முகமட் இக்மால் மஸ்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட அதேவேளையில் ஆகாயப் படை பயிற்றுநரான 33 வயது கார்ப்ரல் முகமட் ஸ்யூப் பிடின் என்பவர் சிகிச்சை பலனின்றி சிகாமாட் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
தவிர செண்டாயான் ஆகாயப்படை தளத்தின் நிர்வாக மற்றும் மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் பயிற்றுநரான 35 வயது கார்ப்ரல் கைருல் ஸமான் லொக்மான் என்பவர் சிகாமாட் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ளார் என்று அரச மலேசிய ஆகாயப்படை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


