மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டாரைப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர்பாரு, இஸ்தானா பூகிச் செரேனா அரண்மனையில் நேற்று மாலையில் சந்தித்தார். அச்சந்திப்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முகநூலில் இன்று பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஓன் ஹஃபீஸ் கஸீயும் கலந்து கொண்டார்.
நாட்டின் பத்தாவது பிரதமராக தாம் தலைமையேற்றப்பின்னர் நாடு மற்றும் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளின் வளர்ச்சி குறித்து இச்சந்திப்பின் போது சுல்தான் இப்ராஹிமிற்கு அன்வார் விளக்கம் அளித்தார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


