கோலாலம்பூர், செப்டம்பர்.24-
கோலாலம்பூரிலும், பூச்சோங்கிலும் உள்ள உடல்பிடி நிலையங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 26 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு பொறுப்புகளில் உள்ள 55 அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்களின் ஆள்பலத்துடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் போது மொத்தம் 42 தனிநபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் குடிநுழைவு விதிமுறைகளை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக 21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 28 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








