கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறிப்பினரான சித்தி மஸ்துராவின் மன்னிப்புச் செய்தி வெளிவராத நிலையில், அவர் மீது காவல் துறை புகார் அளித்துள்ளது ஜ.செ.க.
ஜசெக வின் தலைவர் லிம் குவான் எங், கமியூனிஸ்டு தலைவர் மறைந்த சின் பெங், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவும் உறவினர்கள் என சித்தி மஸ்தூரா கூறியிருந்ததைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க 48 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது, அந்த கால அவகாசம் இன்று வியாழக்கிழமையோடு முடிவடைகின்ற நிலையில், சித்தி மஸ்துரா தரப்பில் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக இருக்கின்ற நிலையில், புக்கிட் பென்டேர நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட் இன்று ப்ரிக்ஃபீல்ட்ஸ் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
யூடியூப் காணொலி வாயிலாக சித்தி மஸ்துஇரா வெளியிட்டக் கூற்று ஆதரமற்றதாகும். தவறான நோக்கத்துடன் வெளியிட்ட ஒரு பொய்யானத் தகவலாகும். வாய்ப்பு கொடுத்தும் அதற்கான விளக்கமோ, ஆதாரத்தையோ சித்தி மஸ்துரா கொடுக்கவில்லை என ஷெர்லீனா தமது காவல் துறை புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், திரங்கானு, கெமாமான் இல் நடந்த பாஸ் கட்சியின் நிகழ்ச்சியில் சித்தி மஸ்தூரா இந்தக் கூற்றை வெளியிட்டார் என நம்பப்படுகிறது.
மேலும் , ஜசெக. கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக், துணைத் தலைவர் ஙா கொர் மிங், தெரெசா கோக், ஙே கோ ஹாம் ஆகிய அனைவரும் உறவுக்காரர்கள் எனவும் சித்தி மஸ்தூரா குற்றஞ்சாட்டி இருந்தார்.
இவ்விவகாரத்தைக் கண்டித்து நேற்று தெலுக் இந்தான் ஜசெக சார்பில் அதன் செயலாளரும் ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கொர் மிங் இன் சிறப்பு அதிகாரி பட்ருல் ஹிஷாம் பின் பஹாருடின் உம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








