Dec 2, 2025
Thisaigal NewsYouTube
MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு!

Share:

சிரம்பான், நவம்பர்.12-

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த MYFutureJobs என்ற இணையத்தளத்தில், கடந்த அக்டோபர் மாதம் வரையில், வேலைக்காகப் பதிவு செய்த 7,000-த்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக வேலை வாய்பினைப் பெற்றுள்ளனர்.

இந்த அடைவு நிலையானது, மக்கள் தத்தம் திறமைக்கேற்ற பொருத்தமான வேலை வாய்ப்புகளை கண்டறிய உதவுவதில் MYFutureJobs ஓர் ஆக்கப்பூர்வமான தளமாகச் செயல்பட்டு வருவதை நிரூபித்துள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் Veerapan Superamaniam தெரிவித்துள்ளார்.

நேற்று சிரம்பானில் துவங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான MyFuturejobs career Summit எனும் நெகிரி செம்பிலான் மாநில அளவிலான வேலை வாய்ப்பு கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் Repah சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் இதனை குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலானில் வேலை வாய்ப்பு தேடி, தங்களை பதிவு செய்து கொண்ட மொத்தம் 13 ஆயிரம் பேரில், ஏழாயிரத்து முந்நூறு பேர், தாங்கள் சார்ந்த குறிப்பிட்டத் துறைகளில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் வீரப்பன் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நடக்கும் மாநாடு, நிர்வாகம் மற்றும் நிபுணத்துவ அளவில் வேலை வாய்ப்புகளையும் உள்ளடக்கியது என்றும் வீரப்பன் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில், மாநிலம் முழுவதும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்