நேற்று கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் டாங் வாங்கி நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது திடீரென நிறுத்தப்பட்டதால், ரயிலின் உள்ளே இருந்த கண்ணாடித் தடுப்பு ஒன்று உடைந்து ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.
திடீர் நிறுத்தத்தின் போது நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் நிலைதடுமாறியதால், அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டில் கண்ணாடித் தடுப்பின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ரேபிட் கே.எல் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மற்ற மூவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரயில் பரிசோதனைக்காக சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இது குறித்த விரிவான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








