சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் வட்டாரத்தில், 13 இடங்கள் டெங்கி ஆபத்து உள்ளதாக அம்மன்றம் அடையாளம் கண்டுள்ளது.
சுபாங் பெர்டானா, புத்ரா ஹைட் 8, தாமான் பூச்சோங் பெர்டானா 1, பன்டார் கின்ராரா 4, தாமான் சௌஜானா பூச்சோங் எஸ்பி 3. ஆகிய பகுதிகள் அவற்றில் அடங்கும் என டத்தோ பன்டார் எம்பிஎஸ்ஜி,முஹமாட் ஃபௌசி முஹமாட் கூறினார்.
சுபாங் ஜெயாவில் கடந்த வாரம் மட்டும் 111 டெங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட டெங்கி சம்பவங்வங்கள் 44 விழுக்காடு அதிகம் என முஹமாட் ஃபௌசி முஹமாட் குறிப்பிட்டார்,
எனவே, வாரம் ஒரு முறை 10 நிமிடம் செலவு செய்து ஏடீஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை தங்கள் வீட்டில் அடையாளம் கண்டு அதனைச் சுத்தம் செய்ய வேண்டும் என பொது மக்களை முஹமாட் ஃபௌசி முஹமாட் கேட்டுக் கொண்டார்.








