Apr 3, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் கார் ஓட்டுநர் ஒருவர் கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

25 வயது இளைஞர் டி.எஸ். குகேந்திரன் என்ற அந்த கார் ஓட்டுநர் ஏற்படுத்திய இந்த விபத்தினால் 24 வயது இளைஞர் ஒருவரின் கால் துண்டிக்கப்பட்டது. மற்றொரு 19 வயது இளைஞருக்கு கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது' தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் குகேந்திரன் மறுத்து, விசாரணை கோரினார். அவருக்கு தலா 3,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 6,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி