Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கெடாவில் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக 23 குடும்பங்கள் இடமாற்றம்!
தற்போதைய செய்திகள்

கெடாவில் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக 23 குடும்பங்கள் இடமாற்றம்!

Share:

சுங்கை பட்டாணி, அக்டோபர்.23-

கெடா கம்போங் ஹுமா, தஞ்சோங் டாவாய் அருகே நேற்று பிற்பகல் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 23 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் தற்காலிக நிவாரண மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நேற்று மாலை 6 மணியளவில் SJKC Choong Cheng நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டதாக கோல மூடா உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி கேப்டன் அமிருல் அஷ்ராஃப் முகமட் மயாடின் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முதல் இரவு வரை அப்பகுதியில் நீடித்த கனமழை நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

நேற்று கடலில் ஏற்பட்ட பேரலைகள், கட்டப்பட்டிருந்த பாதுகாப்புச் சுவரையும் மீறும் அளவிற்கு இருந்ததால், இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமிருல் அஷ்ராஃப் தெரிவித்துள்ளார்.

Related News