கோத்தா ஸ்டார், டிசம்பர்.24-
சில மாதங்களக்கு முன்பு பயிற்சியின் போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளையாட்டுப் பயிற்றுநர் ஒருவருக்கு எதிராக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்தார்.
அந்த பெண்ணின் சார்பாக அவரின் தந்தை அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த பயிற்றுநர் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பயிற்றுநர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் நாடு திரும்பியதும் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என்று சையிட் பஸ்ரி தெரிவித்தார்.








