கோலாலலம்பூர், செந்தூலில் ஒரு வீட்டில் மூன்று இலங்கைப் பிரஜைகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் என்று நம்பப்படும் அந்த இரண்டு இலங்கைப் பிரஜைகளையும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் செந்தூல் மாவட்ட போலீஸ் குழுவினர், கடந்த திங்கட்கழமை சிலாங்கூர், உலு லங்காட்டில் கைது செய்தனர்.
இவ்விருவரும் உலு லங்காட்டில் ஒரு காட்டில் மறைந்து இருந்த போது போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதை செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகர்னோ முகமது ஜஹாரி உறுதி படுத்தினார்.
அவ்விருவரும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர். இது தொடர்பாக விரைவில் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் செந்தூல், ஜாலான் கோவில் ஹிலிர், ஜாலான் பெர்ஹெண்டியன் னில் உள்ள நான்கு மாடி கடைவீடு கட்டட வரிசையில் ஒரு வீட்டில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.
அவர்களை கொலை செய்ததாக நம்பப்படும் இரு இலங்கைப் பிரஜைகள் அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில் அந்த வீட்டில் இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


