May 22, 2026
Thisaigal NewsYouTube
பதின்ம வயதுடைய பெண் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

பதின்ம வயதுடைய பெண் விபத்தில் பலி

Share:

அக்காள், தம்பி பய​ணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பட்டை இழந்து, எதிரே வந்த லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பதின்ம வயதுடைய பெண் உயிரிழந்த வேளையி​ல் அவரின் சகோதரர் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் நேற்று மாலை 2.30 மணியளவில் அலோர் ஸ்டார், கம்போங் பாரிட் புவாயா, ஜாலான் குனூங் கெர்ஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.இதில் SYM Sport ரக மோட்டார் சைக்கிளை செலுத்திய 19 வயது இளம் பெண் தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரின் சகோதரர் அலோர்​ ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு உடன் பிறப்புகளும் முகிம் குனூங், கம்போங் செமாராங் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று அலோர் ஸ்டார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் ஷுக்ரி மாட் அகீர் ​தெரிவித்தார்.

Related News