Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விமானப்பயண உதவித் தொகை 400 ரிங்கிட்டாக அதிகரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்கலைக்கழக மாணவர்களுக்கான விமானப்பயண உதவித் தொகை 400 ரிங்கிட்டாக அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச. 12-


பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் பிலைசிஸ்வா எனும் விமானப் பயணக் கட்டணத்திற்கான உதவித் தொகை, வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளர்.

சபா, சரவாக் மற்றும் லாவுவானைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள், தீபகற்ப மலேசியாவில் தாங்கள் பயிலும் பல்லைக்கழகங்களுக்கு செல்வதற்கும், திரும்புவதற்கும் பிலைசிஸ்வா திட்டத்தின் வாயிலாக அரசாங்கம் தற்போது 300 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் மாணவர்களின் விமானப் பயணக்கட்டணச் சுமையை மேலும் குறைக்கும் பொருட்டு, அடுத்த மாதம் முதல் 100 ரிங்கிட் அதிகரிக்கப்பட்டு, 400 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக பிரதமர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →