அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் மத்தியில் குறிப்பாக தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலமொழி ஆளுமை திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்துள்ளார். தேசிய மொழியான மலாய்மொழியை பலப்படுத்தும் அதேவேளையில் ஆங்கில மொழியிலும் மாணவர்கள் ஆளுமைப் பெற வேண்டும், அவர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களிடையே இரு மொழி ஆளுமை கொள்கைக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில் மலேசியர்கள் அதிலிருந்து விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தொடக்கப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆங்கிலமொழி திறனை உயர்த்தும் முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
மலாய் மொழியை மாண்புறச்செய்யும் அதேவேளையில் ஆங்கிலமொழியிலும் மாணவர்கள் தனித்துவமான ஆற்றலை பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.








