Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் தலைமையில் தேசிய தினக் கொண்டாட்டம் தொடக்கம்: ஜோகூரில் அலைகடலென திரண்ட மக்கள்!
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் தலைமையில் தேசிய தினக் கொண்டாட்டம் தொடக்கம்: ஜோகூரில் அலைகடலென திரண்ட மக்கள்!

Share:

மூவார், ஜூலை.27-

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று ஜோகூர், டத்தாரான் தஞ்சோங் எமாஸில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டன. தொடர்பு – பல்லூடக அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த விழாவில், நாடு முழுவதும் ஒற்றுமைச் செய்தியைக் கொண்டுச் செல்லும் "கெம்பாரா மெர்டேக்கா ஜாலுர் கெமிலாங் 2025" அணிவகுப்பைப் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இலவச மருத்துவப் பரிசோதனைகள், வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், காவல்துறை அபராதங்களில் 30 விழுக்காடு தள்ளுபடி என பல சேவைகளுடன், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தேசபக்தியைப் பறைசாற்றினர்.

Related News