May 22, 2026
Thisaigal NewsYouTube
ஜன்னலை திறக்காமல் காரில் உறங்கிய பெண்
தற்போதைய செய்திகள்

ஜன்னலை திறக்காமல் காரில் உறங்கிய பெண்

Share:

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் காருக்குள் 20 வயதுடைய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அப்பெண் மருத்துவமனையில் உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு வரும் தனது தந்தையை கவனித்து வந்ததாகவும் காரில் ஓய்வெடுக்க வந்தபோது கார் ஜன்னல்களை திறக்காமல் அயர்ந்து உறங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக ஈப்போ ஓசிபிடி அசிஸ்ட் காமிஷனர் யஹாயா ஹாசன் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பாதுகாவலரிடமிருந்து ஓர் அழைப்பு வந்ததாகவும் அதில் ஒரு பெண் சுயநினைவின்றி இருந்ததாகவும் மருத்துவ அதிகாரியின் சோதனைக்கு பின் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக யஹாயா ஹாசன் விவரித்தார்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திடீர் மரணத்தினால் இறந்துள்ளதாக சவப்பரிசோதனையில் தெரியவந்ததாக யஹாயா ஹாசன் மேலும் விளக்கினார்.

Related News