Oct 18, 2026
Thisaigal NewsYouTube

402 பேருக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
402 பேருக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படும்

செரம்பன் ,செப்டம்பர் 14-

சிலாங்கூர் மற்றும் நெகிரிசெம்பிலானில் உள்ள 20 சமூகநல இல்லங்களிலிருந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறார்களுக்கும் கல்வி வாய்ப்பை வழங்க கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

மலேசியாவில் அனைத்து சிறார்களும் தொடக்கக்கல்வியை பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த கொள்கைக்கு ஏற்ப 402 சிறார்களுக்கும் கல்வி வாய்ப்பு வழங்குவதற்கு கல்வி அமைச்சு திறந்த மனதுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →