Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாதுவின் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

மாதுவின் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது

Share:

ஈப்போ, அக்டோபர்.08-

பேரா மாநில அளவில் நடைபெற்ற மெர்டேக்கா கொண்டாட்டத்தின் போது, பிரதான மேடையில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவைத் தாக்க முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாது ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொள்வதாக அந்த மாது ஏற்கனவே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தைத் தள்ளுபடி செய்வதாக மாஜிஸ்திரேட் ஹரித் மஸ்லான் தனது முடிவை அறிவித்தார்.

சம்பவம் நிகழும் போது அந்த மாது, தெளிவான சிந்தனையில் இல்லை என்று கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மன நல மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் நஸ்ருல் ஹாடி அப்துல் கானி, நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த மாதுவின் பூர்வாங்க வாக்குமூலத்தை நிராகரிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

எனினும் அந்த மாதுவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் தனது தற்காப்பு வாதத்தை முன்வைக்கும் அளவிற்கு அவரிடம் விசாரணை நடத்த முடியும் என்று நஸ்ருல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News