ஈரான் போரின் காரணமாக உருவான உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து சமூக ஊடகங்களில் போலி தகவல்கள் பரப்பியதாகக் கூறி, 22 பேரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
மொத்தம் 36 விசாரணை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் இந்த 22 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் MCMC தெரிவித்துள்ளது.
இதில் ஆறு வழக்குகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கறிஞர்களிடம் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233-ன் கீழ் நடத்தப்பட்டதாக MCMC தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கலாம்.








