Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அக்டோபர் 07

கோலாலம்பூர் செராஸ் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்டசோதனை நடவடிக்கையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 33 வயதுக்குட்பட்ட 21 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்தார்.

மூன்று சந்தேகநபர்கள் தற்காலிக பணி அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவர்கள் அதிக காலம் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் சம்பந்தப்பட்ட சிண்டிகேட் RM2,000 முதல் RM5,000 வரை வசூலித்தது விசாரணையில் தெரியவந்ததாக ஜகாரியா கூறினார்!

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →