Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சக பாதுகாவலர் கொலை, பாதுகாவலர் மீது கொலை குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக பாதுகாவலர் கொலை, பாதுகாவலர் மீது கொலை குற்றச்சாட்டு

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 30-

தன்னுடன் பணியாற்றும் சக பாதுகாவலரை கொலை செய்ததாக பள்ளி பாதுகாவலர் ஒருவர், கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

26 வயது வான் ஷஹ்ரிசான் வான் கதிர் என்ற அந்த பாதுகாவலர், மாஜிஸ்திரேட் சித்தி ஹஜர் அலி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால், குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சபக் பெர்னாம் - மில் உள்ள பள்ளி ஒன்றின் பாதுகாவலர் அறையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →