Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பணியிட பாலியல் தொல்லை, அச்சுறுத்தல் புகார்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க எம்எம்ஏ கோரிக்கை
தற்போதைய செய்திகள்

பணியிட பாலியல் தொல்லை, அச்சுறுத்தல் புகார்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க எம்எம்ஏ கோரிக்கை

Share:

பொது சுகாதாரத் துறையில் பாலியல் தொல்லை மற்றும் பணியிடத் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் விசாரணைக்கு தெளிவான காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏ வலியுறுத்தியுள்ளது.

தீர்வு அல்லது விசாரணை குறித்த தகவலின்றி புகார்கள் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படக் கூடாது என எம்எம்ஏ தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அளித்த பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மூத்த அதிகாரிகள் தொடர்பான புகார்களை அவர்களின் நேரடி நிர்வாகச் சங்கிலிக்கு வெளியேயும் அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், தீவிரமான வழக்குகளில் அமைச்சகத்துக்கு வெளியேயுள்ள சுயாதீன உறுப்பினர்களையும் விசாரணைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் புகாரைத் திரும்பப் பெறுமாறு புகார்தாரர் அல்லது சாட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related News