மலாக்கா, அக்டோபர்.15-
மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் ஐந்தாம் படிவ மாணவர்கள் நால்வர், மூன்றாம் படிவ மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் டிபிபி எனப்படும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தின் முடிவுக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர்.
அந்த நான்கு மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டது. விசாரணை அறிக்கை தற்போது டிபிபி அலுவலகத்தில் இருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
17 வயதுடைய அந்த நான்கு மாணவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கான தேதி இன்று முடிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா, ஜாசின் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸுல்கைரி இதனைத் தெரிவித்தார்.








