Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரே குடும்பத்தைச சேர்ந்த மூவர் விபத்தில் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரே குடும்பத்தைச சேர்ந்த மூவர் விபத்தில் பலி

மெர்சிங், டிச.16-


ஜோகூர், மெர்சிங், லாடாங் அராமி ஜெயா சாலை சந்திப்பிற்கு அருகில் ஜாலான் மெர்சிங் – கோத்தா திங்கி சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து, நேற்றிரவு 8.30 மணியளவில் நிழ்ந்தது. அவசரத் தகவல் கிடைத்து 12 பேர் கொண்ட மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மெர்சிங் மாவட்ட தீயணைப்பு நிலையத் தலைவத்ர ஸைனுதீன் அகமட் தெரிவித்தார்.

டோயேட்டோ வியோஸ் காரும், புரோட்டோன் பெர்தசோனா காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு முதியவரும், ஒரு மூதாட்டியும் மாண்ட வேளையில் காரை செலுத்திய 36 வயது நபர், மருத்துவமனக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

டோயோட்டா வியோஸ் காரில் 36 வயது நபர், குவந்தானிலிருந்து ஜோகூர்பாருவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவரின் கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, எதிர்தடத்தில் நுழைந்து, புரோட்டேன் பெர்சோனா காரை மோதியதாக நம்பப்படுகிறது.

இதில் வாகன ஓட்டுநர், கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் புரோட்டோன் பெர்சோனா காரை செலுத்திய 36 வயது நபர், அவரின் 71 வயது தந்தை ,65 வயது தாயார் ஆகியோர் உயிரிழந்தனர்.

வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை மீட்கும் பணி, இரவு 9.45 மணியளவில் முற்றுப்பெற்றதாக ஸைனுதீன் அகமட் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →