Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பில் போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

பெண் ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பில் போலீஸ் புகார்

Share:

ஜோகூர் பாரு, மே.29-

ஜோகூர், தாமான் கோத்தா மாசாயில் உள்ள ஓர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்குப் புகார் கிடைத்துள்ளது. 34 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், கடந்த மே 15 ஆம் தேதி, மாலை 5.53 மணிக்கு புகார் அளித்துள்ளார் என ஶ்ரீ ஆலாம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சம்பவம் மே 15 அன்று மதியம் 1.05 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைகள் நிறைவடைந்து, மே 28 ஆம் நாள் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜோகூர் மாநில துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News