Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மாதுவை மானபங்கம் செய்ததாகப் பல்கலைக்கழக மாணவன் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாதுவை மானபங்கம் செய்ததாகப் பல்கலைக்கழக மாணவன் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன்.24-

கோலாலம்பூர், செராஸ், எம்ஆர்டி ரயில் நிலையத்தில் மாது ஒருவரை மானபங்கம் செய்ததாக தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

ஹஃபிஸ் டாமியான் அப்துல் காவிய் என்ற அந்த மாணவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.53 மணியளவில் தாமான் பெர்தாமா எம்ஆர்டி நிலையத்தில் 28 வயது மாதுவிடம் வக்கிரச் செயலுடன் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாணவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த மாணவன் மறுத்து விசாரணை கோரியுள்ளான்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →