Jan 14, 2026
Thisaigal NewsYouTube
தகுதியற்றவர்களிடமிருந்து எஸ்டிஆர் நிதியைத் திரும்பப் பெற அரசாங்கத்திற்கு உரிமை இருக்கிறது: நிதி அமைச்சு விளக்கம்
தற்போதைய செய்திகள்

தகுதியற்றவர்களிடமிருந்து எஸ்டிஆர் நிதியைத் திரும்பப் பெற அரசாங்கத்திற்கு உரிமை இருக்கிறது: நிதி அமைச்சு விளக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

எஸ்டிஆர் எனப்படும் Sumbangan Tunai Rahmah நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையைப் பெறுகின்றவர், அந்த நிதி உதவியைப் பெறுவதற்கு தகுதியற்றவர் எனத் தெரியவரும் பட்சத்தில், அவரிடமிருந்து அந்த நிதியை மீட்டுக் கொள்ள அரசாங்கத்திற்கு முழு உரிமை உள்ளது என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு நபர் நிதி உதவி பெற்ற பிறகு, அவர் போலித் தகவல்களை வழங்கியது அல்லது தகுதி வரம்புகளை மீறியது கண்டறியப்பட்டால், வழங்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெறவோ அல்லது அடுத்தடுத்த தவணைகளில் கழித்துக் கொள்ளவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

2026-ஆம் ஆண்டிற்கான STR மற்றும் SARA திட்டங்களுக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவாக 15 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

இவ்வாண்டுக்கான STR முதற்கட்டத் தவணை அல்லது Fasa 1க்கான பண பட்டுவாடா, வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். இதற்காக 1.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, சுமார் 50 லட்சம் குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் பயனடைவார்கள் என்று நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News