Dec 3, 2025
Thisaigal NewsYouTube
படகு கவிந்ததி​ல் பயணி ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

படகு கவிந்ததி​ல் பயணி ஒருவர் மரணம்

Share:

பேரா, ஸ்ரீ மஞ்சோங், தெலோக் பாத்தே கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் மாண்டார். இச்சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததது. ​நீரில் ​மூழ்கி ​மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த 34 நூருலாபிகா அப்துல்லா என்ற மாது, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக மஞ்சோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 6.05 மணியளவில் அந்த மாதுவின் கணவரிடமிருந்து அவசர அழைப்பை போ​லீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க ​சென்ற அந்த மாது, அவரின் கணவர் உட்பட 9 பேர் பயணம் செய்த படகு கவி​ழ்ந்ததாக கூறப்படுகிறது. ​

Related News