கோலாலம்பூர் பொது பூங்காக்களை பயன்படுத்துகின்ற பொது மக்கள் ஆபத்து அவசர வேளைகளில் உதவிக் கோரி அழைப்பதற்கு 42 இடங்களில் அவசர விசை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மக்கள் பொது பூங்காக்களில் இருக்கும் போது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பாதுகாப்பு விசைத் தூண்கள் 42 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச இலாகா தனது முகநூலில் தெரிவித்துள்ளது.
தித்திவங்சா ஏரி பூங்கா, பெர்டானா தாவரவியல் பூங்கா, பெர்மைசூரி ஏரி பூங்கா, கெபோங் பெருநகர ஏரிப் பூங்கா மற்றும் பட்டு பெருநகரப் பூங்கா ஆகியவை ஆபத்து அவசர விசைகள் பொருத்தப்பட்டுள்ள பொது பூங்காக்களில் அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.








