May 24, 2026
Thisaigal NewsYouTube
AI- முதல் 20 நாடுகளில் மலேசியா இருக்க வேண்டும் என்று இலக்கு
தற்போதைய செய்திகள்

AI- முதல் 20 நாடுகளில் மலேசியா இருக்க வேண்டும் என்று இலக்கு

Share:

ஷா ஆலம்,ஆகஸ்ட் 19

இன்றைய நவீன உலக்தோடு ஒன்றி செயல்படுவதற்கு AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதல் 20 நாடுகளில் மலேசியா இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய அனைத்து கட்சிகளும் ஆதரவளித்து பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், மலேசியாவிற்கு ‘CLOUD’ என்ற சுய கணினி அமைப்பை உருவாக்குவது உட்பட AI கற்றல் மற்றும் ஆராய்ச்சியை எளிதாக்கும் வகையில், நாட்டின் AI சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் மலேசியா உதவும் என்றார் அவர்.

அதைத் தவிர்த்து, மனிதர்களின் தனிப்பட்ட தரவுகள் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பாதிக்கப்பட்டாலும், மக்கள் அதனை பொறுப்பாக நன்முறையில் பயன்படுத்தினால் அது போன்ற தீய விளைவுகளை தவிர்க்கலாம் என்று பிரதமர் விவரித்துள்ளார்.

இதனிடையே, 'deepfake' தொழில்நுட்பமானது இலக்கவியல் மீதான நம்பகத்தன்மையைச் சிதைத்து, மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுக்கவில்லை.

மேலும், மக்களின் வாழ்வில் AI இன் தாக்கம் தொடர்பான அபாயங்களைக் கண்டறிந்து ஆபத்தைக் குறைக்கும் முன்னெடுப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இருப்பினும், AI தகவல் கசிவு சிக்கலைத் தவிர்ப்பதற்கு முறையான கொள்கைகளும் சட்டங்களும் நாட்டிற்குத் தேவை என்று பிரதமர் கூறினார்.

Related News