Oct 16, 2026
Thisaigal NewsYouTube

17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நவ. 24-

பினாங்கு, Bayan Lepas இல் உள்ள Queen Water Front Q1க்கு முன்பு ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர் என Barat Daya மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Sazalee Adam தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 19 முதல் 40 வயதுடைய 15 ஆண்களும் இரண்டு பெண்களும் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் Op Cantas நடவடிக்கையை மேற்கொண்டு BAYAN LEPAS பகுதியில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தனர், மேலும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் Sazalee Adam கூறினார்.

"கைது செய்யப்பட்ட 17 பேரும் தொழிற்சாலை பணியாளர், கல்லூரி மாணவர், உணவக உதவியாளர், வியாபாரி, வேலையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து சண்டையில் பயன்படுத்தப்பட்ட ஐந்து ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

அவர் கூறுகையில், அவர்களில் மூன்று பேர் மீது போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 148வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று கூறினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →