May 4, 2026
Thisaigal NewsYouTube
சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.23-

சபாவில் இன்று திங்கட்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 1,774 குடும்பங்களைச் சேர்ந்த 4,348 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், Pitas, Paitan மற்றும் Tawau ஆகிய பகுதிகளில் உள்ள 70 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் மூன்று மாவட்டங்களில் உள்ள, 32 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், சபாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா கணித்துள்ளது.

Related News