கோலக்கிள்ளானுக்கு அருகில் உள்ள மீன் பிடி தீவான பூலாவ் கெத்தாமில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலகையிலான சில கடைகள் அழிந்தன. கொழுந்து விட்டு எரிந்த தீயில் அந்த தீவின் படகுத்துறையில் கட்டப்பட்டு இருந்த சில இயந்திரப் படகுகளும் சேதமுற்றன.
தீ காலை 11 மணியளவில் பரவியதாக பூலாவ் கெத்தாமில் ஹோட்டல் நடத்தி வரும் ஜோன் சா என்பவர் கூறினார். நாலா புறமும் பரவிய தீ, பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


