கோலாலம்பூர், அக்டோபர்.30-
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள 21 மருத்துவமனைகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
ஒவ்வொரு மருத்துவமனையும் முக்கியமான சிகிச்சைகளைக் கையாளுவதில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் வகையில் சிறந்த மருத்துவ மையமாக தரம் உயர்த்தப்படவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
21 மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் வகையில் 2025 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








