சிரம்பான், டிசம்பர்.05-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தங்களின் சேவைத் திறனை வழங்குவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று மாதச் சம்பளம் அடுத்த மாதமும், அடுத்த வருடம் மார்ச் மாதம் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவும் வழங்கப்படும் என்று அமினுடின் ஹருன் தெரிவித்தார்.








