நாட்டின் முன்னணி பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒன்றான சைத்தோ யுனிவெர்சிட்டி கோலேஜ்ஜில் மித்ராவின் கல்வி நிதி உதவின் மூலம் டிப்லோமா லாவ் & என்ஃபொர்ஸ்மென் எனும் சட்டம் மற்றும் அமலாக்கத் துறையில் மட்டும் டிப்ளோமா பயிற்சி பெறுவதற்கு இந்திய சமூகத்தை சேர்ந்த முதல் 10 மாணவர்களுக்கு இட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சைத்தோ பல்கலைக்கழக கல்லூரியும், மித்ராவும் இணைந்து வழங்கும் இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் கொண்டுள்ள இந்திய மாணவர்கள் பி40 குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்பிஎம் தேர்வில் குறைந்த பட்சம் 3 கிரெடிட் பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வல்ல இந்த பயிற்சித்திட்டத்திற்கான மாணவர் சேர்ப்பு 2023 அக்டோபரில் தொடங்குகிறது.
ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கீழ் கண்ட தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு, விபரம் பெறலாம்.








