Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

டிச. 29-

கனரக வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பான சக்கரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த ஆணையை மீறும் ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk M. Jana Santhiran தெரிவித்துள்ளார். சக்கரங்களின் தரத்திலும் பாதுகாப்பிலும் அமைச்சு தீவிர கவனம் செலுத்துகிறது என்றார்.

தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, பல கனரக வாகனங்கள் சாலையில் பயன்படுத்தத் தகாத சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இவை மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சேதமடைந்துள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண போக்குவரத்து அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என Jana Santhiran குறிப்பிட்டார்.

சக்கரத்தை மாற்றும் செயல்முறையை எளிதாக்க, கனரக வாகன ஓட்டுநர்கள் தரமான கூடுதல் சக்கரங்களைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பு தொழில்நுட்ப நடவடிக்கையின் ஒரு பகுதியாக, JPJ அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதன் மூலம், சாலை பாதுகாப்பை மேலும் மேம்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சிறப்பு நடவடிக்கையின் ஐந்தாவது நாளில், 15 ஆயிரத்து 770 சரக்கு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், = ஆயிரத்து 716 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன ஐந்தாயிரத்து 163 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்