Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவர் மரணம்: 21 பேரிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாணவர் மரணம்: 21 பேரிடம் போலீஸ் விசாரணை

Share:

கோலா பிலாவில் பள்ளி விடுதியில் 14 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், உயிரிழந்த மாணவரின் பெற்றோர் உட்பட 21 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

எனினும், மாணவர் முஹமட் இட்லான் ஃபாரிக் ஷாரில் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், மேலதிக பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 16 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News