Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பராமரிப்பு இல்லத்தில் பதின்ம வயது இளைஞரை பகடிவதை புரிந்ததாக நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பராமரிப்பு இல்லத்தில் பதின்ம வயது இளைஞரை பகடிவதை புரிந்ததாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

பத்து பஹாட், ஜுன் 30-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை பராமரிப்பு இல்லத்தில் பதின்ம வயது இளைஞர் ஒருவரை வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் வகையில் பகடிவதை புரிந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

ஒரு தொழிற்சாலையின் ஊழியரான 20 வயது அந்நபர் மாஜிஸ்திரேட் சுஹைலா ஷஃபியுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜோகூர், தமன் கோபராசி - யில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் 11 வயது இளைஞர் ஒருவரை வேண்டுமென்று காயம் விளைவிக்கும் வகையில் பகடிவதை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்