Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் மருத்துவமனைப் பணியில் டாக்டர் நோர் ஹிஷாம்
தற்போதைய செய்திகள்

மீண்டும் மருத்துவமனைப் பணியில் டாக்டர் நோர் ஹிஷாம்

Share:

முன்னாள் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டாக்டார் நூர் ஹிஷாம் அப்துல்லா புத்ராஜெயா மருத்துவமனையில் என்டோக்ரின் பிரிவில் மருத்துவராகத் தமது பணியைத் தொடர்வதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தமது முகநூலில் பதிவிட்ட அவர், ஒவ்வொரு திங்கட் கிழமையும் தாம் அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற இருப்பதாகவும் செவ்வாய்க் கிழமைகளில் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதாரத் துறையில் 35 ஆண்டுகாலம் சேவை ஆற்றி வந்த டாக்டர் நோர் ஹிஷாம் கடந்த ஏப்பிரல் மாதம் 19 ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்ற அவர் நாடு கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்டபோது மிக முக்கியப் பங்காற்றி மக்கள் நாயகனாக அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Related News