Feb 18, 2026
Thisaigal NewsYouTube
சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.18-

ஜோகூர் மாநில அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளிலும் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத்தின் சுல்தானுமான மாமன்னர், மாநிலத்தின் நல்வாழ்வையும் தொடர்ச்சியான செழிப்பையும் பாதுகாப்பதற்கு நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகமே அடிப்படை என்று வலியுறுத்தினார்.

இன்று இஸ்தானா பாசீர் பெலாங்கியில் ஜோகூர் மந்திரி பெசார் முதலமைச்சர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மற்றும் மாநிலச் செயலாளர் டத்தோ முஹமட் ரிடா அப்துல் காடீர் ஆகியோரைச் சந்தித்த போது மாமன்னர் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது பாசீர் கூடாங் மாநகர் மன்றத் தலைவர் டத்தின் படுகா ஹஸ்லினா ஜாலிலும் ஜோகூர் நிலம் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் முஹமட் ஷாகிப் அலியும் உடனிருந்தனர்.

Related News