Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னரின் பிறந்தநாள் நிகழ்வு
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் பிறந்தநாள் நிகழ்வு

Share:

மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கெளரவ பட்டங்கள், நட்சத்திரங்கள் மற்றும் கூட்டரசு பதக்கங்கள் விருதளிப்பு விழா இன்று இஸ்தானா நெகாராவில் மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இவ்விழாவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் அவரது துணைவியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர்.

மாமன்னர் தம்பதியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன் அரச மலாய் படைப்பிரிவின் இன்னிசை குழுவினரால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 21 பிராங்கி குண்டுகள் முழுங்கப்பட்டன.

மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து, இவ்விழாவில் மொத்தம் 839 நபர்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

Related News