Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ரோம்பினில் புதைக்கப்பட்ட சிறுவனின் மரணம் - தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள்!
தற்போதைய செய்திகள்

ரோம்பினில் புதைக்கப்பட்ட சிறுவனின் மரணம் - தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள்!

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.03-

நெகிரி செம்பிலான், ரொம்பின், ஜெம்போலில் புதருக்குள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மரண வழக்கில், சிறுவனின் தந்தை மீது பல குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

36 வயதான சந்தேக நபர், மனைவியைக் காயப்படுத்திய வழக்குகள் குறித்தும் தனது குழந்தை காணாமல் போனதாகக் கொடுத்த பொய்ப் புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறார். அந்தச் சிறுவன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜோகூர் காவல்துறையின் விசாரணைகள் முடிந்ததும், தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News