Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வேலை வாய்ப்பு மோசடிகளைத் துடைத்தொழிக்க மலேசியா - தாய்லாந்து கூட்டு முயற்சி
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்பு மோசடிகளைத் துடைத்தொழிக்க மலேசியா - தாய்லாந்து கூட்டு முயற்சி

Share:

மலேசியர்களைக் குறி வைத்து நடக்கும், தாய்லாந்தில் வேலை வாய்ப்பு மோசடி நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க தாய்லாந்து அதிகாரிகளைச் சந்தித்தார் தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் டத்தோ ஜொஜி சேமுவல் .

தாக் சொம்சாய் மாகாண ஆளுநர் Kitcharoenrungroj, குடிவரவு அலுவலகக் கண்காணிப்பாளர் Pol Kol Buwornphop Soontornlekh, வடக்கு தாய்லாந்தில் அமைத்துள்ள Mae Sot காவல் நிலையத் தலைவர் , Pol Kol Monsak Kaew-on ஆகியோரைச் சந்துத்து இவ்விவகாரம் குறித்து டத்தோ ஜொஜி விவாதித்தார்.

மனித கடத்தல், பாலியல் சுரண்டல், ஆண்கள், பெண்கள், குழந்தைகளை உட்படுத்திய வன்கொடுமைச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படும் குடியேற்றத்திற்கான அனைத்துலக அமைப்பான IOM, ஆஸ்திரேலிய அமைப்பான Global Alms Incorporated ஆகியவற்றின் நிகராளிகளையும் அவர் சந்தித்தார்,

இவ்விவகாரத்தில் மேலும் அதிகமானோர் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்கும் நோக்கில் அச்சந்திப்புக் கூட்டம் அமைந்ததாக டத்தோ ஜோஜி கூறினார்.

தாய்லாந்தில் மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டதை அந்நாட்டு அதிகாரத்துவத்தினர் கண்டறிந்தால், உடனையாக மலேசியத் தூதரகத்திற்குத் தகவல் தரப்படும் எனவும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகள் செய்து தரப்படும் எனவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டில் இருந்து தாய்லாந்தில் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 83 பேர் மலேசியாவுக்கு மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஜொஜி குறிப்பிட்டார்.

Related News