Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இழுவை லோரி வாகனங்களுக்கு டீசல் உதவித் தொகை; அரசாங்கம் பரிசீலிக்கும்
தற்போதைய செய்திகள்

இழுவை லோரி வாகனங்களுக்கு டீசல் உதவித் தொகை; அரசாங்கம் பரிசீலிக்கும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-

உதவித்தொகை வழங்கப்பட்ட டீசல் கட்டுப்பாட்டு முறை - SKDS-இல் இடம்பெற, இழுவை லோரி வாகன நடத்துநர்கள் மேல்முறையீடு செய்திருந்தால், அவர்களது விண்ணப்பங்கள் நன்கு ஆராயப்பட்டு பரிசீலிக்கப்படும்.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின மீதான துணை அமைச்சர் செணட்டர் புஜியா சாலே அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

தற்போதைக்கு மேல்முறையீடு செய்துள்ள தரப்புகளின் விண்ணப்பங்கள், நேரடியாக ஆராயப்படுகின்றன. இழுவை லோரி வாகன நடத்துநர்களும் மேல்முறையீடு செய்தால், தாங்கள் கொண்டுள்ள சிறப்பு செயற்குழு அவர்களின் விண்ணப்பங்களையும் ஆராயும் என்றாரவர்.

SKDS திட்டத்தின் கீழ் டீசல் உதவித்தொகை வழங்கப்படும் 23 வகை வாகனங்களுக்கான பட்டியலில், தங்களையும் சேர்த்துக்கொள்ளக்கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இழுவை லோரி வாகன நடத்துநர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கையை முன்வைத்தனர்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது