Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கவும் நடப்பதாகக் கூறப்படும் சதித் திட்டங்கள் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்த ஐஜிபி, இந்த விசாரணை மிகவும் விரிவானது என்பதால், இதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். "இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தொழில்முறை ரீதியாக விசாரணை முன்னெடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாகக் போலீஸ் புகார் பெறப்பட்டது. இதில் செல்வாக்குமிக்க ஓர் உள்ளூர் நபர் மற்றும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கையாளும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதனிடைய சட்டத்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி "இந்தச் சதியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பின்னணி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்