Jan 7, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அறிவித்த 10 வியூக முன்முயற்சிகளுக்கு KUSKOP அமைச்சர் ஸ்டீவன் சிம் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் அறிவித்த 10 வியூக முன்முயற்சிகளுக்கு KUSKOP அமைச்சர் ஸ்டீவன் சிம் வரவேற்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.05-

மலேசியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ள பத்து வியூக முன்முயற்சிகளை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சரான குஸ்கோப் (KUSKOP) வரவேற்பதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வணிகங்களின் பணப்புழக்கத்திற்கு உடனடி நிவாரணம் அளிக்கவும், செயல்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் முக்கிய அம்சமாக, சிறு நிறுவனங்களுக்காக 2.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதித்தொகை இதற்கு முன் எந்த நிதியுதவியும் பெறாத தொழில்முனைவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும், 2026-இல் வருமான வரி, 2023 முதல் -2024 க்கு Refund முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும், கால்நடைத் தீவனம், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான விற்பனை வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, வாடகைச் சேவை வரி 8 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.

மேலும் கட்டுமானத் துறை மற்றும் சிறு ஒப்பந்ததாரர்களுக்கு உதவும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்குச் சேவை வரி விலக்கு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுமானத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரை விற்பனை மதிப்பைக் கொண்ட நிறுவனங்களுக்கு மின்-இன்வாய்ஸ் (e-invoice) அபராதங்கள் 2026 இறுதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தவிர, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த 10 ஆயிரம் 0 சிறு வணிகர்கள் 'சாரா' (SARA) திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்த 80 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்கள் மூலம் சிறு தொழில் துறையை நாட்டின் பொருளாதாரத் தூணாக மாற்ற தமது அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக ஸ்டீவன் சிம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பிரதமர் அறிவித்த 10 வியூக முன்முயற்சிகளுக்கு KUSKOP அமைச்... | Thisaigal News