Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதையில் வாகனமோட்டிய நபருக்கு ஒரு நாள் சிறை, வெ. 10 ஆயிரம் அபராதம்
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் வாகனமோட்டிய நபருக்கு ஒரு நாள் சிறை, வெ. 10 ஆயிரம் அபராதம்

Share:

மலாக்கா, மார்ச் 1 -

தனது பிறந்த நாள் விழாவை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு, மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய முதியவர் ஒருவருக்கு மலாக்கா, ஆயேர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் விதித்தது.

63 வயது தூங் சென் குவின் என்ற அந்த முதியவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மலாக்கா தெங்கா,ஜாலான் தம்பி அப்துல்லா சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை அந்த முதியவர் ஒப்பியதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனையையும், அபராதத் தொகையையும் விதித்தது.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது